உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த நபர் உள்ளிட்ட, 5 பேர் மீது 'போக்சோ'வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், பானையங்கால் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கண்ணன்,33; இவர், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை கடந்த ஏப்., 24ம் தேதி திருமணம் செய்தார். இது குறித்து தகவலறிந்த தியாகதுருகம் மகளிர் ஊர்நல அலுவலர் சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த கண்ணன், அவரது தந்தை செல்வராஜ், தாய் தனக்கோடி மற்றும் சிறுமியின் தந்தை ஏழுமலை, தாய் செல்வி ஆகிய 5 பேர் மீது 'போக்சோ' சட்டத்தில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி