சிறுமியிடம் பாலியல் சீண்டல் வாலிபர் மீது போக்சோ வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கட்சிபாக்கத்தை சேர்ந்த சங்கர் மகன் சக்திவேல்,23; இவரும் கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியும் கடந்த 8 மாதமாக காதலித்துள்ளனர். இந்நியைில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியை அவர் தனியாக வரவழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் அளித்தனர். கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.