உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நகை, பணம் திருட்டு போலீசார் விசாரணை

நகை, பணம் திருட்டு போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெண்ணிடம் இருந்த 4 கிராம் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துாரை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி சாந்தி, 45; இவர், தனது 4 கிராம் தங்க தாலி குண்டு, ரூ.37ஆயிரம் பணத்தை பையில் வைத்து அதனை, மற்றொரு பேக்கில் வைத்து கொண்டு கள்ளக்குறிச்சியில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 16 என்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி பேக்கை திறந்து பார்த்தபோது, அதற்குள் வைக்கப்பட்டு இருந்த நகை பணத்துடன் கூடிய சிறிய பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து சாந்தி அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ