உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாலி செயின் திருட்டு போலீசார் விசாரணை

தாலி செயின் திருட்டு போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணின் 5 சவரன் தாலி செயினை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சின்னசேலம் அடுத்த பங்காரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி செல்வி, 52; கூலித்தொழி லாளி. இவர் கடந்த 4ம் தேதி தச்சூர் சிவன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகம் முடிந்து பார்த்த போது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயின் மாயமாகி இருப்பதை கண்டு செல்வி அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நகை திருடு குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 3 பெண்களிடம் நகை பறிப்பு தச்சூர் சிவன் கோவில் விழாவில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி, 70; என்ற மூதாட்டியிடம் 2 சவரன் செயின், பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி மீனா, 47; கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க தாலி செயினை மர்ம பறித்து சென்றனர். இதுவரை 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 3 பெண்களிடம் நகை பறிப்பு தச்சூர் சிவன் கோவில் விழாவில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி, 70; என்ற மூதாட்டியிடம் 2 சவரன் செயின், பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி மீனா, 47; கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க தாலி செயினை மர்ம பறித்து சென்றனர். இதுவரை 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி