உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் பெண் சடலம் போலீஸ் விசாரணை

கிணற்றில் பெண் சடலம் போலீஸ் விசாரணை

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் சடலமாக கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த பிரம்மகுண்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி அம்மு, 29; இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண்; 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நேற்று விவசாய நிலத்திற்கு சென்ற அம்மு, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை தேடிப் பார்த்தபோது, கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.இதுகுறித்து அம்முவின் தந்தை கோவிந்தசாமி, மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், வட பொன்பரப்பி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை