குழந்தையுடன் தாய் மாயம் போலீஸ் விசாரணை
ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே காணாமல் போன மனைவி, மகனை கண்டுபிடித்து தரக்கோரி கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.வாணாபுரம் அடுத்த ஓடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் மனைவி சரண்யா, 24; திருமணமாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 15ம் தேதி முதல் சரண்யா மற்றும் மகனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.