உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பட்டதாரி பெண் மாயம்போலீஸ் விசாரணை 

பட்டதாரி பெண் மாயம்போலீஸ் விசாரணை 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான முதுகலை பட்டதாரி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தை சேர்ந்த குமார் மகள் பொற்செல்வி, 25; முதுகலை பட்டதாரி. நேபால் தெருவில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில், டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்கு, படித்து கொண்டிருந்தார். கடந்த,7 ம் தேதி வீட்டில் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி