உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி ஷாலினி,19; இருவருக்கும் கடந்த ஜன., 31ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஷாலினி கள்ளக்குறிச்சியில் உள்ள தாய் ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்தார்.இந்நிலையில், கடந்த 6ம் தேதி அவர் திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை