உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தையுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை

குழந்தையுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே குழந்தையுடன் காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி நிஷா, 25; இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒன்னரை வயதில் வர்ஷன் என்ற குழந்தை உள்ளது.பாஸ்கரன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 3ம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி நிஷா, மகன் வர்ஷனுடன் காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை