உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணிடம் செயின் பறிப்பு  மர்ம நபருக்கு போலீஸ் வலை

பெண்ணிடம் செயின் பறிப்பு  மர்ம நபருக்கு போலீஸ் வலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த வடபூண்டி காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த குமரவேல் மனைவி செல்வகுமாரி,25; இவர் கடந்த 30 ம் தேதி இரவு குடும்பத்துடன் வீட்டில் படுத்து துாங்கியுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென செல்வகுமாரியின் கழுத்திலிருந்த செயினை மர்ம ஆசாமி பறிக்க முயன்றுள்ளார். உடன் சுதாரித்து கொண்ட செல்வகுமாரி செயினை இருக பிடித்து கொண்ட நிலையில் ,3 சவரன் நகையில், பாதி அறுந்து ஒன்னரை சவரன் நகையை மர்ம ஆசாமி பறித்து கொண்டு தப்பினார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை