நகை பாலிஷ் மோசடி போலீஸ் எச்சரிக்கை
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் நகை பாலிஷ் போடுவதாக கூறி வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தெரிவித்துள்ளார்.அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சங்கராபுரம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள், கிராமங்களில் நகை பாலிஷ் செய்து தருவதாக கூறி வருகின்றனர். அவர்கள் பாலிஷ் போடும் போது, அசல் நகையை எடுத்துக்கொண்டு, 'கவரிங்'நகையை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.