உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பாச்சேரி கஸ்துாரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.பள்ளி ஒருங்கிணைப்பாளர் வினோதினி தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியை இளவரசி, ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் பயிற்றுனர் முருகேசன் மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் புத்தாடை வழங்கினார்.தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் பத்மஸ்ரீகண்ணம்மா, ஜெயந்தி, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ