உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  துணை ராணுவ பாதுகாப்புடன் தபால் ஓட்டுகள் பதிவு

 துணை ராணுவ பாதுகாப்புடன் தபால் ஓட்டுகள் பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதியில், 1,600 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், இதர தேர்தல் பணி அலுவலர்கள், போலீசார் என 2,500க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணி காரணமாக நேரடியாக சொந்த ஊரில் ஒட்டு அளிக்க முடியாத ஊழியர்களுக்கு, தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தொகுதியில் தபால் ஓட்டு பதிவு விழுப்புரம் அரசு மகளிர் கல்லுாரி மைய கலையரங்கில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன் தலைமையில் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கி மாலை 5:00 வரை நடந்தது. தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்திருந்த 380 ஊழியர்கள் தபால் ஓட்டு பெட்டியில் தங்களது தபால் ஓட்டு படிவத்தை செலுத்தினர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் தபால் ஓட்டு பதிவு நடந்தது. மாலை ஓட்டுப்பதிவு முடிந்து, சீல் வைக்கப்பட்டு, விழுப்புரம் தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !