26ம் தேதி தபால் சேவை குறைகேட்பு முகாம்
கள்ளக்குறிச்சி : விருத்தாசலம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைகேட்பு முகாம் வரும் 26ம் தேதி நடக்கிறது.விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் செய்திக்குறிப்பு:விருத்தாசலம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைகேட்பு முகாம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதை சாதாரண அல்லது விரைவு தபால் மூலம், விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கே.பி.டி., வளாகம், கடலுார் ரோடு, விருத்தாசலம், 606 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மனுக்கள் வரும் 23ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.