மேலும் செய்திகள்
கவிதை - கட்டுரை போட்டி: அசத்திய பள்ளி மாணவர்கள்
17-Oct-2025
சங்கராபுரம்: மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்கராபுரம் அடுத்த எஸ்.வி. பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி செல்வா, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதனையடுத்து மாணவிக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியில் நடந்த பாராட்டு விழாவுக்கு, தலைமையாசிரியர் ரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் இளையராஜா வரவேற்றார். ஆசிரியர்கள் தனசேகரன், லோகநாராயணன், சின்னதுரை, அசோகன், கோமதுரை, கோவிந்தராஜ், கனிமொழி, ராஜேந்திரன், முத்து, மீனா, பார்த்தீபன், ஆரோக்கியலுாத்துராஜ், சித்ரா, சிவரஞ்சினி, தீனதயாளன், அருள்குமார் பங்கேற்றனர்.
17-Oct-2025