உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் பிரேமலதா பிரசாரம்

திருக்கோவிலுாரில் பிரேமலதா பிரசாரம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் தே.மு.தி.க., சார்பில், 'உள்ளம் தேடி, இல்லம் நாடி'பிரசார பயணம் தொகுதியின் முக்கிய பகுதிகளில் நடந்தது. தே.மு.தி.க., சார்பில் தமிழகம் முழுதும் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம், பிரேமலதா மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் திருக்கோவிலுார் தொகுதி சுற்று பயணத்தில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு அரசூரில் விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திருவெண்ணைநல்லுார், திருக்கோவிலுார், கண்டாச்சிபுரத்தில் பிரேமலதா சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சிகளில் மண்டல பொறுப்பாளர் பார்த்தசாரதி, பொருளாளர் சுதீஷ், இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கருணாகரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், மும்மூர்த்தி, சரவணன், நகர செயலாளர்கள் அஷ்ரப், ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !