கூட்டுறவு வளர்ச்சி மற்றும் கல்வி நிதிக்கு இணைப்பதிவாளரிடம் காசோலை வழங்கல்
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம், கல்வராயன்மலை ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் ஈட்டிய லாப தொகையில் 5 சதவீத பங்கு கூட்டுறவு சங்க இணைப்பதிவாளரிடம் வழங்கப்பட்டது. சங்கராபுரம், கல்வராயன்மலை ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் பொதுப்பேரவை கூட்டம் சங்க செயலாட்சியர் ராஜராஜன் தலைமையில் நடந்தது. 2024-25ம் ஆண்டு இறுதி தணிக்கை அறிக்கை மற்றும் வரவு, செலவு கணக்கு அங்கீகரித்தல் உட்பட பல்வேறு கூட்டப்பொரு ள்கள் தொடர்பாக ஆலோசனை நடந்தது. சங்கம் கடந்த நிதியாண்டில் 39 லட்சத்து 55 ஆயிரத்து 799 ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது. லாப பிரிவினை தொகையில் 3 சதவீதம் கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதிக்கும், 2 சதவீதம் கூட்டுறவு கல்வி நிதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 790 ரூபாய்க்கான காசோலையை காசோலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசனிடம் நேற்று வழங்கப் பட்டது. கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் சுகந்தலதா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் செல்வராசு, சங்க செயலாளர் கண்ணன் உடனிருந்தனர்.