உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்; ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்; ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ஊதிய ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் பெற்ற சம்பளத்தின் மீது 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு கால நிதி பயன்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கராபுரம் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு நேற்று நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தெய்வீகன், துணை தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கவுரையாற்றினர். சங்கராபுரம், வெள்ளிமலை ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தால், ரேஷன் கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை