உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்களுடன் முதல்வர் திட்டம்: நலத்திட்ட உதவி வழங்கல்

மக்களுடன் முதல்வர் திட்டம்: நலத்திட்ட உதவி வழங்கல்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த செட்டித்தாங்கலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் வரவேற்றார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் அஞ்சலாட்சி அரசகுமார், துணைச் சேர்மன் தனம் சக்திவேல், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தங்கம், ரிஷிவந்தியம் சேர்மன் வடிவுக்கரசி, ஒன்றிய கவுன்சிலர் குமாரி, ஊராட்சி தலைவர் அன்புமதி குணசேகர்.ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் ஜெய்சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர் கணேஷ், மணலுார்பேட்டை பேரூராட்சி தலைவர் ரேவதி ஜெய்கணேஷ், பி.டி.ஓ.,க்கள் நடராஜன், கண்ணன், தாசில்தார்கள் மாரியாப்பிள்ளை, குமரன், செயல் அலுவலர் மேகநாதன்.நகர செயலாளர் ஜெய்கணேஷ், துணைத் தலைவர் தம்பிதுரை, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜி, நிர்வாகிகள் சாங்கியம் ஊராட்சி தலைவர் அய்யனார், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, இளைஞர் அணி உதயா, விஜய், பாண்டியன், பிரகாஷ், ஞானவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில், அமைச்சர் வேலு சிறப்புரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகளை வழங்கி பேசுகையில், 'மக்களைத் தேடி மனுக்கள் பெரும் திட்டம் முதன், முதலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தான் தொடங்கப்பட்டது. 15க்கும் மேற்பட்ட துறைகள் மூலம் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து இன்று 14 ஆயிரத்து 427 பயனாளிகளுக்கு அரசின் சார்பில் ஆணைகள் வழங்கப்படுகிறது.கடந்த 2 ஆண்டுகளில் இந்த மாவட்டத்தில் 470 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 160 கோடியில் கட்டட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு 200 கோடி ஒதுக்கப்பட்டு அந்த கட்டிடங்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. 1,482 கி.மீ., துார சாலைகளை பராமரிக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை ஏற்றுள்ளது. 33.62 கோடியில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 385.27 கோடியில் சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை