உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு 

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு 

ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் ஒன்றிய கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குளம் வெட்டும் பணியினை மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, வேலைக்கு வந்துள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அளவீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, வெங்கலம், மையனுார், கூடலுார், பாசார் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.பணிகளை தரமாகவும், உடனடியாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகன்நாதன், பொறியாளர் ஷபான்கான் மற்றும் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி