அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலுார்: இந்து சமயத்தை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருக்கோவிலுார், பஸ் நிலையத்தில் மாவட்ட பா.ஜ., சார்பில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிந்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.மாநிலத் துணைத் தலைவர் சம்பத், மாநில செயலாளர்கள் வினோஜ் செல்வம், மீனாட்சி நித்திய சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன், வடக்கு மாவட்ட தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தனர். தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கண்டன உரையாற்றினார். தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.