உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பட்டா மாற்றம் செய்யக்கோரி தாலுகா அலுவலகத்தில் தர்ணா

பட்டா மாற்றம் செய்யக்கோரி தாலுகா அலுவலகத்தில் தர்ணா

சங்கராபுரம்; சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தனி பட்டாவை மாற்றம் செய்யக்கோரி குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது தந்தை ராமு பெயரில் உள்ள வீட்டுமனை இடத்தினை தனது சகோதரர் போலி ஆவணம் மூலம் வருவாய் துறை அதிகாரிகள் உதவியோடு தனி பட்டாவாக மாற்றிக் கொண்டதாக புகார் தெரிவித்து, தனி பட்டாவை ரத்து செய்யக் கோரி கடந்த 2021ம் ஆண்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோர் விசாரணை செய்து தனிபட்டாவை ரத்து செய்து, கூட்டு பட்டாவாக வழங்க உத்தரவிட்டுள்ளனர். ஆனால், சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படாமல் உள்ளது. இதனை கண்டித்து நேற்று மதியம் 2:00 மணிக்கு சங்கராபுரம் தாலுகா அலுவலக நுழைவு வாயிலில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாசில்தார் விஜயன், தலைமையிடத்து துணை தாசில்தார் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மாலை 4:00 மணியளவில் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை