விவசாயிகளை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மரவள்ளி பயிர் செய்த விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏழுமலை, பொருளாளர் ஆறுமுகம், துணை செயலாளர் ஏழுமலை, துணை தலைவர் தெய்வீகன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். இதில் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட சேகோசர்வ் ஆலையை விரைவில் அமைக்க வேண்டும். மரவள்ளி கிழங்கினை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஜவ்வரிசி ரூ.4500, ஸ்டார்ச் ரூ.3500 என கொள்முதல் விலை அறிவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். பிற பயிர்களுக்கு உள்ளதுபோல் மரவள்ளிக்கிழங்கிற்கும் பயிர் காப்பீடு செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் மணி, மணிமாறன், கோவிந்தன், ராம்குமார், சாமிநதான், சுரேஷ்குமார், கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.