உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் ராஜவேல் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மெய்யப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மணிக் கண்ணன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங் கினார். ஊராட்சி தலைவர் நந்தகுமார், துணைத் தலைவர் சம்ஷாத், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் வாழ்த்திப் பேசினர். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை உதவி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் ஒருங்கிணைத்தார்.உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை