மேலும் செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்
05-Jun-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில், ரோட்டரி கிளப் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி காவல் நிலைய வளாகத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் சத்யன் வரவேற்றார். ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கோதம்சந்த் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் கல்யாண் குமார், கார்த்திக் போலீசாருக்கு ஹெல்மெட்டுகளை வழங்கினர். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ், ரோட்டரி கிளப் சாசன தலைவர் வாசன், உறுப்பினர்கள் முத்துக்குமாரசுவாமி, ராஜேஷ்குமார், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
05-Jun-2025