உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது விநியோக திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

பொது விநியோக திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான பொது விநியோகத் திட்ட மாதாந்திர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மழைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீதான நடவடிக்கை விபரம், புதிய ரேஷன் கார்டு கேட்டு அளித்த மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை