உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இன்று பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

இன்று பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைகேட்பு முகாம் இன்று நடக்கிறது. கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலக செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் உள்ள குடிமைப்பொருள் பிரிவில் பொது விநியோகத் திட்டத்தில் இன்று 10ம் தேதி ரேஷன்கார்டு குறைகேட்பு சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மற்றும் பெயர் மாற்றம், மொபைல் எண் இணைத்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !