உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாளை பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

நாளை பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி, வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட குறைகேட்பு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி ஆகியோரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நாளை 12ம் தேதி குறைகேட்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ள முகாமில், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், கைபேசி எண் இணைத்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை