கள்ளக்குறிச்சியில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகராட்சியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் நகராட்சியிலுள்ள 21 வார்டுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தெருவிலும் ஒன்றிரண்டு நாய்களே தென்பட்ட நிலையில், தற்போது 20க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர். நாய்கள் அதிகரிப்பால், இரவு நேரங்களில் தெருவில் நடந்து செல்ல கூடாத முடியாத நிலை ஏற்பட்டு மக்கள் பரிதவிக்கும் நிலை இருந்து வருகிறது. மேலும் பகல் நேரங்களில் பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வரை அனைவரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.