சிமெண்ட் சாலை கேட்டு பொதுமக்கள் மனு
கள்ளக்குறிச்சி: புக்கிரவாரி காலனி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க பொதுமக்கள் மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; புக்கிரவாரி காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால், மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமமடைகின்றனர். அவசர உதவிக்கு வரும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனமும், ரேஷன் பொருட்களை ஏற்றி வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களும் புக்கிரவாரி காலனி பகுதிக்கு வர முடியாவதில்லை. எனவே, புக்கிரவாரி காலனி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.