உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் மறியல்

100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் மறியல்

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டில் 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. மேலும், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று மூங்கில்துறைப்பட்டு திருவரங்கம் சாலையில் காலை 8:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன், புருஷோத்தமன் மற்றும் ஊராட்சி தலைவர் சிரஞ்சீவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், தடையின்றி 100 நாள் வேலை வழங்கப்படும். மேலும், மாரியம்மன் கோவில் அருகே மினி டேங்க். பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைப்பது. கை பம்புகள் பழுது நீக்குவது என அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, 10:00 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை