உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துாரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 44 மனுக்கள் பெறப்பட்டது.முகாமிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார். தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் பெறபட்ட 44 மனுக்களில் 24 ஏற்கப்பட்டது. மற்றவை பரிசீலனையில் உள்ளது. பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, தையல் இயந்திரம் உட்பட 208 பயனாளிகளுக்கு ரூ. 75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், சப் கலெக்டர் ஆனந்த் குமார்சிங், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி