உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க பொது மக்களுக்கு கோரிக்கை

குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க பொது மக்களுக்கு கோரிக்கை

சங்கராபுரம்: சங்கராபுரம் பேருராட்சியில் குப்பைகளை 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என பொது மக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: சங்கராபுரம் பேரூரராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும்  குப்பைகளை மக்கும் கழிவு, மக்காத கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு வகை கழிவு  என 4 வகையாக தரம் பிரித்து வழங்க வேண்டும். அக்டோபர் 1ம் தேதி முதல் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் குப்பைகளை வீடுகளில் இருந்து சேகரிக்கப்படமாட்டாது. இதற்கான 4 வகையான குப்பைகளை  தனித்தனியாக சேகரிக்கும் வகையில் குப்பை தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள்  குப்பைகளை தரம் பிரித்து வழங்கி பேரூராட்சியில் துாய்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு  வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !