மேலும் செய்திகள்
சுடுகாட்டிற்கு இடம் கேட்டு கிராம மக்கள் மறியல்
28-Sep-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து வீரபாண்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.முகையூர் அடுத்த வீரபாண்டி ஊராட்சியில், 2வது வார்டைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து, வார்டு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, 33; தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் வீரபாண்டி, அண்ணா சிலை அருகே நேற்று காலை 8:10 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருக்கோவிலுார் - வேட்டவலம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த அரகண்டநல்லுார் போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து 8:40 மணியளவில் மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.
28-Sep-2024