மேலும் செய்திகள்
பஸ் நிலையத்தில் வாலிபர் சடலம்; போலீஸ் விசாரணை
07-Jul-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சென்டர் மீடியனில் பைக் மோதிய விபத்தில் புதுச்சேரி மாநில வாலிபர் இறந்தார்.புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன் மகன் ஸ்ரீவிராஜ், 37; பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், சொந்த வேலை காரணமாக கோயம்புத்துார் சென்றவர் நேற்று, அங்கிருந்து புதுச்சேரிக்கு 'டுகாட்டி்' பைக்கில் திரும்பினார்.நேற்று காலை 8:00 மணிக்கு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி, அண்ணா நகர் மேம்பாலம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் சென்டர் மீடியனில் மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Jul-2025