மேலும் செய்திகள்
சேவா பாரதி கல்வி தான மையம் துவக்க விழா
4 minutes ago
நாளை மின் தடை (09.12.2025)
50 minutes ago
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
23 hour(s) ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு சாலையை கடக்க முற்பட்டபோது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாம்பை கண்டு அலறி ஓடினர். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பாம்பு பிடி வீரர் ரவிக்கு தகவல் அளிக்கப்பட்டது. ரவி சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் ஊர்ந்து சென்ற 7 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள பூட்டை காப்புக்காட்டில் விட்டார். ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பால் அரசம்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
4 minutes ago
50 minutes ago
23 hour(s) ago