பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழைநீர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், சேலம், வேலுார், கோயம்புத்துார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பஸ் ஸ்டாண்டு மற்றும் வணிக வளாக பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால், பஸ் ஸ்டாண்டு மற்றும் சுற்றுப்புற சாலையில் மழைநீர் குளம் தேங்கி நிறகிறது. இதனால், பஸ் நிலையத்திற்கு வரும் பயணியர், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். சில இடங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால், பயணிகளால் நடக்க கூட முடியாத நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டு மற்றும் அதன் அருகில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.