உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு 13, 14ம் தேதிகளில் ரேஷன் விநியோகம்

தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு 13, 14ம் தேதிகளில் ரேஷன் விநியோகம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 13 மற்றும் 14ம் தேதி முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்திகுறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் 70 வயதுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கு சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும், இனி வரும் மாதங்களிலும் மாதத்தின் 2வது சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திட்ட பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடை கார்டுதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை