உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.வழக்கறிஞர் சிவலோகநாதன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் செந்தில் முன்னிலை வகித்தார். முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் ராஜா பங்கேற்று பேசினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பன்னீர்செல்வம் வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில், பொதுமக்கள் அடிப்படை சட்டங்களை தெரிந்து கொண்டு, சிறு, சிறு பிரச்னைகளை தங்களுக்குள் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, அறிவுறுத்தப்பட்டது.துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !