உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விதை விற்பனையாளர்களுக்கு புத்துாட்ட பயிற்சி முகாம்

விதை விற்பனையாளர்களுக்கு புத்துாட்ட பயிற்சி முகாம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில், அனைத்து தாலுகாக்களைச் சேர்ந்த விதை விற்பனையாளர்களுக்கான புத்துாட்ட பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் விற்பனை பற்றி கூறினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் ஆகியோர் விதைகளின் முக்கியத்துவம், தரமான விதைகள் விநியோகம் மற்றும் சேமிப்பு பற்றி விளக்கினார்.மேலும் இப்பயிற்சியில் விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன், விதை விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி பேசினார்.பயிற்சியில் 150க்கும் மேற்பட்ட விதை விற்பனையாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.கள்ளக்குறிச்சி விதை ஆய்வாளர் நடராஜன் விதை ஆய்வு நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியை இடுபொருட்கள் விநியோக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !