ஆசிரியர்களுக்கு புத்தொளி பயிற்சி
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆசிரியர்களுக்கான புத்தொளி பயிற்சி நடந்தது.பயிற்சிக்கு, முன்னாள் கல்வி இணை இயக்குனர் மதிவாணன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி முன்னிலை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜூ வாழ்த்திப் பேசினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட, செம்மொழி தமிழாய்வு நடுவன் நிறுவனத்தின் முன்னாள் பதிவாளர் முத்துவேலு, ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள பாடங்களை கற்பித்தால் மட்டும் போதாது, வெளியுலக வாழ்க்கை, நாகரிகமாக நடந்து கொள்ளும் விதம், அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற மாணவர்களை ஊக்குவித்தல், நாட்டு நடப்பு ஆகியவற்றையும் கற்பிக்க வேண்டும் என பேசினார். துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.