உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 207 குடும்பத்திற்கு நிவாரண உதவி

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 207 குடும்பத்திற்கு நிவாரண உதவி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 207 குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த நிவாரண உதவிகள் பெறுவதற்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதில் போர்வை, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. முதல்வர் விழுப்புரத்தோடு திரும்பி சென்றதால், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் பிரசாந்த் 207 பயணாளிகளுக்கு ரூபாய் 20 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது சப் கலெக்டர் ஆனந்த்குமார்சிங், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, ஒன்றிய சேர்மங்கள் சாந்தி இளங்கோவன், ராஜவேல், ஒன்றிய செயலாளர்கள் வசந்தவேல், முருகன் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் செல்லையா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை