உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திரவுபதி அம்மன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திரவுபதி அம்மன் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றப்பட்டது. திருக்கோவிலுார், பிடாரியம்மன் கோவில் வீதியில், திரவுபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. அங்கு இருந்த பழுதடைந்த ஆக்கிரமிப்பு கட்டடத்தை, அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் அந்த கட்டடத்தை அகற்றும் பணியை மேற்கொண்டனர். ஜே.சி.பி., மூலம் பழுதடைந்த ஆக்கிரமிப்பு கட்டடம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. அப்போது, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமேஷ், கோவில் நிலங்கள் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், சரக ஆய்வாளர் கவிதா, நகராட்சி ஆணையர் திவ்யா, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை