உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தண்ணீர் கசிந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி சீரமைப்பு

தண்ணீர் கசிந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி சீரமைப்பு

கள்ளக்குறிச்சி; காட்டனந்தலில் புதிய மேல்நிலைநீர்தேக்க தொட்டியில், தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன கள்ளக்குறிச்சி அடுத்த காட்டனந்தல் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதியதாக கட்டப்பட்டது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நேற்று முன்தினம் நீரேற்றம் செய்து சோதனை செய்யப்பட்டது. உடன், அடுத்த சில மணி நேரங்களில் அந்த தொட்டியில் இருந்து ஒரு சில இடங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, சீரமைப்பு பணிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் உட்புற பகுதிகள் முழுவதும் சிமெண்ட் பூச்சு மேற்கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை