மேலும் செய்திகள்
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
21-Apr-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கோட்டைமேடு போலீஸ் குடியிருப்பில் சுற்று சுவர் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் பழைய போலீஸ் குடியிருப்பு அகற்றப்பட்டு கடந்த சில ஆண்டுக்கு முன்பு ரூ.2 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடியிருப்பு கட்டப்பட்டது. அங்கு பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்புக்கு சுற்று சுவர் இல்லாததால் கால்நடைகள் உள்ளே உலா வந்து கொண்டிருக்கின்றன. மேலும் தரைதளத்தில் போலீசார் நிறுத்தி செல்லும் வாகனங்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இதற்கிடையே போலீஸ் குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அமைக்கப்படாமல் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.
21-Apr-2025