மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குழு கூட்டம்
15-Mar-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை டாக்டர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல், அடையாள அட்டைகளை பெற்று தருதல், வங்கி கணக்கு துவக்குதல் குறித்த வழிமுறைகள் விளக்கப்பட்டன. ஒவ்வொரு சிறப்பு பயிற்றுநரும், ஒரு குழந்தையை கல்வி சார்ந்த நிலை அல்லது விளையாட்டு போன்ற தனித்திறமையை வெளிக்கொணர்ந்து மாநில, தேசிய அளவில் உருவாக்க வேண்டும், சிறப்பு குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதுடன், அவர்களின் முன்னேற்ற நிலை சார்ந்த அறிக்கையை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து தகுதிவாய்ந்த, 111 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச ரயில் பயண அட்டை வாங்கி தர உறுதுணையாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பு பயிற்றுநர், இயன்முறை டாக்டர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன. ரயில் பயண அட்டை பெற்ற சிறப்பு குழந்தைகள் பெற்றோர் ஒருவருடன் 5 ஆண்டுகளுக்கு ரயிலில் இலவசமாக பயணிக்கலாம். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.
15-Mar-2025