உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆபத்தை உணராமல் நெடுஞ்சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம்

ஆபத்தை உணராமல் நெடுஞ்சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம்

கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் ஏரிக்கரை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலர் ஆபத்தை உணராமல் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக் கட்டையை கடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டள்ளது.உளுந்துார்பேட்டை - சேலம் இருவழிச்சாலையாக இருந்த புறவழிச் சாலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டது. இதனால், கடந்த சில மாதங்களாக புறவழிச் சாலைகள் அனைத்தும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடக்கிறது.அதில் கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் கோமுகி ஆற்றின் குறுக்கே புதியதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. பணிகள் முழுமையாக முடிந்ததையடுத்து தற்போது வாகன போக்குவரத்தும் துவங்கியுள்ளது. நீலமங்கலம் கிராம மக்கள் கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்வதற்கு ஏரிக்கரை சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அப்பகுதியில் ஏற்கனவே உள்ள மேம்பாலம் மற்றும் தற்போது புதிய உயர்மட்ட பாலம் வழியாக செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.இதனால் நீலமங்கலம் ஏரிக்கரை வழியாக செல்லும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை நடுவே தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டது. இதன்காரணமாக அங்குள்ள மேம்பாலத்தை சுற்றி சென்று சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சுற்றிச் செல்வதற்கு சிரமப்பட்டு சிலர், சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையின் இரு திசையிலும் இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் உடைத்துள்ளனர்.அதன் வழியாக இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் ஆபத்தை உணராமல் சாலையை கடந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் படிக்கும் தங்களது பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பலர் சாலையை கடக்கின்றனர். இதனால், அப்பகுதியில் விபத்து அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை