உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராமப்புற மாணவர்களின் கனவுகளை நினைவாக்கி வரும் ஆர்.கே.எஸ்., கல்லுாரி சேர்மன் பெருமிதம்

கிராமப்புற மாணவர்களின் கனவுகளை நினைவாக்கி வரும் ஆர்.கே.எஸ்., கல்லுாரி சேர்மன் பெருமிதம்

கல்லுாரி முடித்ததும் பணி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தி மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் கல்லுாரியாக ஆர்.கே.எஸ்., உள்ளது என, சேர்மன் கூறினார்.ஆர்.கே.எஸ்., கல்விக்குழும சேர்மன் டாக்டர் மகுடமுடி கூறியதாவது: டாக்டர்.ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாவட்டத்தில் 'நாக்' தரச்சான்று பெற்ற ஒரே இருபாலர் கல்லுாரியில், 9 இளங்கலை, 8 முதுகலை, 2 இளமுனைவர், 1 முனைவர் பாடப்பிரிவுகள் உள்ளன. இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இங்கு பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதுடன், பல்கலைகழக தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வாரந்தோறும் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. விளையாட்டு துறையில் மாணவர்கள் சாதனை படைத்து மாநில, தேசிய அளவில் இடம் பிடித்துள்ளனர். அரசு கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு பெற்று தரப்படுகிறது. நடப்பாண்டில் மாவட்ட அளவில் நடந்த பேச்சு, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் ஆர்.கே.எஸ்., மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஏழை, எளிய மாணவர்கள், மதிப்பெண், விளையாட்டு உள்ளிட்ட காரணங்களால், நிர்வாக குழு கல்வி உதவி தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முழுபேருந்து உதவி தொகை வழங்கப்படுகிறது. கல்லுாரியில் பயின்ற மாணவர்கள் உலகின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வருகின்றனர். சிலர், தனி நிறுவனம் அமைத்து பணியளித்தும் வருகின்றனர்.மாணவர்கள், மாணவிகளுக்கு வேம்பு மற்றும் நிலா இல்லம் என தனி, தனி விடுதிகள் குறைந்த கட்டணத்தில் சிறந்த கட்டமைப்போடு பராமரிக்கப்படுகிறது. ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரி, மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கருத்தரங்குகள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இவ்வாறு சேர்மன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ