ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரியில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் அப்புதுரை முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார்.நிகழ்ச்சியில் ஆன்லைன் வழியாக நடக்கும் குற்றங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், பெண் குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதற்கு கல்வியின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ராஜா, ஹேமலதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். கல்லுாரி தேசிய மாணவர் படை அலுவலர் பாண்டியன் நன்றி கூறினார்.