எஸ்.பி., அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். பெங்களூருவை சேர்ந்தவர் குமார் மகள் கீதா,21; அதே பகுதி கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படிக்கிறார். இவரும், பெங்களூர் தனியார் நிறுவன ஊழியரான, கள்ளக்குறிச்சி மாவட்டம், அதையூரை சேர்ந்த முருகன் என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்துள்ளனர். இரு வீட்டார் தரப்பிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த, 7ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள முருகன் கோவிலில், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், கீதாவின் பெற்றோர் தரப்பில் இருத்து ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு வழங்கவும், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.